Venkat Prabhu Clarifies on Saroja Part 2

‘சரோஜா-2’ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வெங்கட்பிரபு!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்து ஹிட்டான சரோஜா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாகவும், அதில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் சில தினங்களாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. அனால் தற்போது இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாக வந்த தகவல்களில் சிறிதும் உண்மையில்லையாம்! இது குறித்து வெங்க்ட பிரபு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் விவரம் வருமாறு!

‘‘நான் தற்போது ‘சென்னை -28’ இரண்டாம பாகத்தின் இறுதிகட்ட வேலைகளில் பிசியாக இருந்து வருகிறேன். என்னுடைய வருங்கால படங்களை விரைவில் நான் ரசிகர்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கும் நிலையில் இப்படி ஒரு வதந்தி பரவி வருவது வேதனை தருகிறாது. ‘சரோஜா-2’ பற்றி நான் சிறிது கூட யோசிக்கவில்லை. தற்போது என்னுடைய முழு கவனமும் ‘சென்னை-28’ இரண்டாம் பாகத்தின் மீது தான் இருக்கிறது. எப்படி 2007 ஆம் ஆண்டு ‘சென்னை-28’ ரசிகர்கள் மத்தியில் ஒரு அற்புதத்தை நிகழ்த்தியதோ அதே போல் 2016-ஆம் ஆண்டு அதன் இரண்டாம் பாகமும் ஒரு அற்புதத்தை நிகழ்த்தும். 2007 மற்றும் 2016 ஆகிய இரண்டு ஆண்டுகளும் தற்செயலாக லக்கி எண்னான ஒன்பதில் தான் முடிகிறது’’ என்று தனக்குரிய நகைச்சுவை உணர்வோடு கூறுகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.⁠⁠⁠⁠

Related Posts

JOIN THE DISCUSSION