ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் 'நிபுணன்' திரைப்படத்தில் இணைந்த 'நெருப்புடா' அருண்ராஜா காமராஜ்!! | The Nerrupu Da man in Action Kings Nibunan

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் ‘நிபுணன்’ திரைப்படத்தில் இணைந்த ‘நெருப்புடா’ அருண்ராஜா காமராஜ்!!

தமிழில் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, மலையாளத்தில் ‘பெருச்சாழி’ ஆகிய படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன் இயக்கும் புதிய படமான ‘நிபுணன்’ படத்தில் அர்ஜுன், பிரசன்னா, வைபவ், வரலட்சுமி, சுமன், சுஹாசினி, ஸ்ருதி ஹரிஹரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். தமிழ் தவிர கன்னடத்திலும் உருவாகி வரும் இப்படத்திற்கு கன்னடத்தில் ‘விஸ்மயா’ என்று பெயர் வைத்துள்ளனர்.

‘‘இப்படத்தில் அர்ஜுன் சால்ட் & பெப்பர் தோற்றத்தில் ரஞ்சித் காளிதாஸ் என்ற கண்டிப்பு மிக்க புலனாய்வு அதிகாரியாக நடிக்கிறார். இவருடன் சக அதிகாரிகளாக ஜோசஃப் என்ற கதாபாத்திரத்தில் பிரசன்னாவும், வந்தனா என்ற கேரக்டரில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கிறார்கள். ‘லூசியா’ மற்றும் ‘கோதிபன்னா சாதாரண மைக்கட்டு’ ஆகிய கன்னட படங்களில் நடித்த ஸ்ருதி ஹரிஹரன் அர்ஜுனுக்கு மனைவியாக நடிக்கிறார்.

நிபுணன் படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதுமாக முடிவடைந்து குரல் பதிவு, இசைக்கோர்வை மற்றும் அனைத்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில், சமீபத்தில் உலகம் முழுக்க பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி திரைப்படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான நெருப்புடா பாடலுக்கு சொந்தக்காரர் அருள்ராஜ் தற்போது நிபுணன் குழுவில் இணைந்திருக்கிறார்.

’ஃபேஷன் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம் ஆகியோருடன் அருண் வைத்தியநாதனும் தயாரிப்பில் இணைந்துள்ள் இப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்ப்திவு செய்கிறார். எஸ்.நவீன் இசை அமைக்கிறார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்கத்தை ஆறுசாமி கவனிக்கிறார்.

Related Posts

JOIN THE DISCUSSION

Comments

  • Justus February 26, 2017 at 7:00 am

    Never would have thunk I would find this so ineaspensibld.

    Reply