Simbus Pinchula Pinchula Song from Bharaths Simba Movie

பரத்தின் “சிம்பா” படத்தில் சிம்பு பாடிய “பிஞ்சுல பிஞ்சுல” பாடலை வெளியிடும் பிரபுதேவா!!

அறிமுக இயக்குனர் அர்விந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் ‘BLACK COMEDY’ GENRE’ல் பரத் கதாநாயகனாகவும் பானு ஸ்ரீ மெஹ்ரா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் ‘சிம்பா’. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரமணாவும் மற்றும் பிரேம்ஜி அமரனும் நடித்துள்ளனர்.

தனிமையினால் வாழ்க்கை திசைமாறி எப்போதுமே HALLUCINATION’ல் (/பிரம்மையில்/) உழலும் ஒருவனின் உலகம் எப்படி இருக்கும்., அதைத்தான் இப்படத்தின் இயக்குனர் தனது சிறப்பான காட்சியமைப்புகள் மூலம் பிரம்மிக்கவைக்கும்படியாக சொல்லியிருக்கிறார்.

விஷால் சந்திரசேகர் இசை அமைத்திருக்கும் இப்படத்தில் “பிஞ்சுல பிஞ்சுல” என்று தொடங்கும் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். இப்படத்தின் இசை உரிமைகளை கைபற்றியுள்ள திங்க் முயுசிக் நிறுவனம் சிம்பு பாடிய பாடலை இன்று மாலை பிரபுதேவா மூலம் வெளியிட உள்ளனர்.

Related Posts

JOIN THE DISCUSSION