படப்பிடிப்பில் ரசிகர்களுக்காக சிக்ஸ்பேக்கை காட்டிய நான் கடவுள் ராஜேந்திரன்! | Nan kadavul Rajendrans Yaanai Mel Kuthirai Saavari

படப்பிடிப்பில் ரசிகர்களுக்காக சிக்ஸ்பேக்கை காட்டிய நான் கடவுள் ராஜேந்திரன்!

அறிமுக இயக்குனர் கருப்பையா முருகன் தானே இயக்கி தயாரித்து வரும் படம் ‘யானை மேல் குதிரை சவாரி’. மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அர்ச்சனாசிங், லொள்ளுசபா சாமிநாதன், வழக்குஎண் முத்துராமன் கிருஷ்ணமூர்த்தி, மிப்பு, தாரிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒரு காரியத்தை செய்ய முயற்சி செய்யாமலே முடியாதுன்னு முடிவு பன்றதுதான் உலகத்துலையே நம்பர் ஒன் முட்டாள்தனம்ங்கிறத மனசுல வச்சிக்கிட்டு ஒரு டீம் தங்களால முடியாத காரியத்தை முடிக்க முயற்சி பண்றதுதான் இப்படத்தின் கதை.

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் அரக்கோணம் அருகே நடந்த பொது, நிறைய பொதுமக்கள் கூடி படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தனர், அதில் சில இளைஞர்கள் ராஜேந்திரனை பார்த்து ‘தலைவா’ ‘சிங்கம் சகாயம்’ என்று கத்தி அதகளபடுத்தியதோடு விடாமல் ‘உங்க சிக்ஸ்பேக்க காமிங்க’ என்று வேண்டுகோள் வைக்க, ராஜேந்திரனும் சட்டையை கழட்டி சிக்ஸ்பேக்கை காட்டி மிரட்டினார்.

Related Posts

JOIN THE DISCUSSION