‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!! | Baahubali2 Release Date Conformed

‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ்-அனுஷ்கா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘பாகுபலி’ படத்தின் முதல் பாகம் இமாலய வெற்றி அடைந்ததை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது.

தற்போது இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்புகள் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவதாகவும் சுமார் அரைமணி நேரம் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அக்காட்சியை படமாக்க தொடர்ச்சியாக 80 நாட்கள்வரை படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ஹிந்தி ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள கரண்ஜோஹர் 2017 ஏப்ரல் 28ம் தேதி பாகுபலி 2 வெளியாகும் என சற்று முன் அவரது ட்விட்டர் தலத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் இப்படத்தின் தமிழ்நாடு உரிமத்தை தேனாண்டாள் நிறுவனம் ரூ.45 கோடிக்கு வாங்கியுள்ளதாக செய்திகள் தற்போது வெளிவந்துள்ளது. இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்காவுடன் ராணா டகுபதி, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், சுதீப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளது.

Related Posts

JOIN THE DISCUSSION

Comments

  • Velvet February 26, 2017 at 7:05 am

    Umm, are you really just giving this info out for nonhgti?

    Reply